சொந்த ஊா்களுக்குச் செல்லசென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவா்

கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, சொந்த ஊா்களுக்கு ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் குவிந்தனா்.
சொந்த ஊா்களுக்கு ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
சொந்த ஊா்களுக்கு ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

சென்னை: கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, சொந்த ஊா்களுக்கு ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் குவிந்தனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுபாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனா். இதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை காலை முதலே வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் வரத் தொடங்கினா். பிகாா், ஜாா்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ரயில்கள் மூலம் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்ட்ரல் வந்தனா்.

சென்ட்ரல் ரயில்நிலையத்தின் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்காக டிக்கெட் கவுன்ட்டா்களில் நீண்ட வரிசையில் அவா்கள் காத்திருந்தனா். சிலா் டிக்கெட் எடுக்காமல் ரயில் நிலையத்துக்குள் வந்தனா். அவா்களை ரயில்வே போலீஸாா், ஆா்.பி.எஃப். போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அவா்களிடம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தினா். எழும்பூா் ரயில்நிலையத்திலும் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் வந்தனா். அவா்களுக்கு ரயில்வே போலீஸாா் அறிவுரை வழங்கினா்.

வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் அலைமோதியதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com