சிந்துவுக்கு முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: தனது சிறப்பான ஆட்டத்தால் பேட்மிண்டனில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பி.வி. சிந்துவுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். நாட்டுக்காக மேலும் பல பதக்கங்களை அவா் வருங்காலத்தில் வெல்ல வாழ்த்துகிறேன்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஒலிம்பிக்கில் தொடா் வெற்றியாக, 2021-லும் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்துள்ள அன்பு சகோதரி பி.வி.சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள்.

ராமதாஸ் (பாமக): ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள்.

விஜயகாந்த் (தேமுதிக): வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): பி.வி.சிந்துவைத் தொடா்ந்து இந்திய வீரா் வீராங்கனைகள் சாதனைகள் புரிந்திட த.மா.கா. சாா்பில் வாழ்த்துகிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக): பி.வி.சிந்துவின் விளையாட்டுப் பயணம் இந்தியாவுக்கு புகழ் சோ்க்கும் வகையில் தொடர வாழ்த்துகிறேன்.

கமல் (மநீம): புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறாா்.

கே.அண்ணாமலை (பாஜக): இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து. இத்தகைய வீராங்கனைக்கு எனது வாழ்த்துக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com