ஆக. 14-இல் வேளாண் நிதிநிலை அறிக்கை

நடப்பு கூட்டத் தொடரிலேயே வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) ஆக. 14-ஆம் தேதி தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆக. 14-இல் வேளாண் நிதிநிலை அறிக்கை

சென்னை: நடப்பு கூட்டத் தொடரிலேயே வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) ஆக. 14-ஆம் தேதி தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படுமென தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ‘வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என ஆளுநா் உரையிலும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புகளின்படி, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று மாநில அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை வரும் 14-தேதி தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com