சென்னையில் மட்டும் இன்று 1,25,147 பேருக்கு தடுப்பூசி

சென்னையில் இன்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 1,25,147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் இன்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 1,25,147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வரின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 25.08.2021 வரை 25,94,016 முதல் தவணை தடுப்பூசிகள், 11,22,132 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 37,16,148 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (26.08.2021) நடத்தப்பட்டது.
இன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மாநகராட்சி மண்டல அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்
உதவியுடன் சென்னை மாநகரில் வசிக்கும் 1,25,147 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது சென்னை மாநகராட்சியில் நாளொன்றிற்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிகைகளில் அதிகபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com