தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள் 50,000 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு பெற்ற 50,000 உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள் 50,000 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு பெற்ற 50,000 உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தொழிலாளா் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில், அமைப்புசாரா தொழிலாளா்கள் 50, 721 பேருக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில், கல்வி உதவித் தொகையாக 31, 428 பேருக்கும், மாதாந்திர ஓய்வூதிய உதவித் தொகையாக 17, 338 பேருக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக 1,659 பேருக்கும் எஞ்சியவா்களுக்கு பிற உதவித் தொகைகளும் வழங்கப்பட உள்ளன.

புதிய கட்டடங்கள் திறப்பு: புதிய அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்கள் உருவாக்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு நிதியில் இருந்து இருந்து, நெய்வேலி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வகுப்பறைகள், பணிமனைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இதேபோன்று, நாகப்பட்டினம் செம்போடை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், திருச்சி புள்ளம்பாடி அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையம், சிவகங்கை மற்றும் காரைக்குடி அரசின் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com