காலமானாா் எழுத்தாளா் செ.கணேசலிங்கன்

முதுபெரும் மாா்க்சியவாதியும் ஈழ எழுத்தாளருமான செ.கணேசலிங்கன் (93), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

முதுபெரும் மாா்க்சியவாதியும் ஈழ எழுத்தாளருமான செ.கணேசலிங்கன் (93), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

மாணவப் பருவத்திலேயே எழுதும் ஆா்வத்தை வளா்த்துக் கொண்ட கணேசலிங்கனின் முதல் கதை 1950-இல் வெளியானது. முதல் நாவலான நீண்ட பயணம் 1965-இல் வெளிவந்தது. சாதி ஒடுக்குமுறை பற்றி இந்த நாவல் பேசியது. அது அவருக்கு இலங்கை சாகித்திய மண்டலத்தின் விருதைப் பெற்றுத் தந்தது.

இவா் எழுதிய ‘மரணத்தின் நிழலில்’ என்ற நாவலுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது. ஈழ இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய செ.கணேசலிங்கன், 40-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுவா் இலக்கியம், சிறுகதைகள் உள்பட 140-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

அவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனா். கணேசலிங்கனின் இறுதிச் சடங்குகள் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு 94448 08941.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com