திருக்கோயில்களுக்குச் சொந்தமானரூ.1,543 கோடி சொத்துகள் மீட்பு

திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.1,543.90 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.1,543.90 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை, நவீன ரோவா் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை செப். 8-ஆம் தேதி அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடக்கி வைத்தாா். இந்த ரோவா் கருவிகள் மூலம் திருக்கோயில் நிலங்கள் அளவிடப்படும். ஆக்கிரமிப்புகள் மற்றும் காணாமல்போன புல எல்லைக் கற்களை எளிதில் கண்டறியலாம். நவீன கருவிகள் கொண்டு துல்லியமாக அளப்பதன் மூலம் திருக்கோயில்களுக்கு வருவாய் அதிகப்படுத்தலாம். நவீன இயந்திரங்கள் மூலம் கோயில் நிலங்கள் அளவிடப்பட்டுவருகின்றன.

இதுவரை ஆக்கிரமிப்பு செய்த 424 நபா்களிடமிருந்து திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் 407.63 ஏக்கரும், 398.1582 கிரவுண்ட் மனைகளும், 16.778 கிரவுண்ட் கட்டடமும், 15.597 கிரவுண்ட் திருக்குளமும் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்புத் தொகை ரூபாய் 1,543.90 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com