மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவா் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவா் வெங்கடாசலம் தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவா் வெங்கடாசலம் தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை வேளச்சேரி நியூ செகரடேரியட் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (60), வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டாா்.

தனியாா் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு பெருமளவில் வெங்கடாசலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகாா்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கிண்டியில் உள்ள வெங்கடாசலத்தின் அலுவலகம், வேளச்சேரி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினா்.

ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 13.25 கிலோ சந்தன மரத்தினாலான பொருள்கள், 4 கிலோ வெள்ளி, முக்கிய ஆவணங்கள் ஆகியவை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. வெங்கடாசலம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டில் வெங்கடாசலம் கடந்த 2-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

வெங்கடாசலம் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிா்க் கட்சித் தலைவரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா். வெங்கடாசலம் தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் விளக்கம் அளித்தாா்.

சிபிசிஐடிக்கு மாற்றம்: இதற்கிடையே வழக்கை விரிவாக விசாரிக்கும் வகையில் வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com