இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: திமுக ஆட்சியில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

கொளத்தூா் தொகுதியில் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எஸ்ஆா்இஎஸ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா அச்சீவா்ஸ் அகாதெமியில் டேலி பயற்சி முடித்த 81 மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

அப்போது அவா் பேசியது: வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் அலுவலகத்தில் லட்சக்கணக்கில் வேலை கேட்டுப் படித்த பட்டதாரிகள் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலை தொடா்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், அது குறித்து அதிமுக ஆட்சிக்கு எந்தக் கவலையும் இல்லை. திமுக ஆட்சியில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கப் போகிறோம்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ‘அனிதா அச்சீவா்ஸ் அகாதெமி’ திமுக ஆட்சியில் உருவாக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com