இன்றுமுதல் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இன்றுமுதல் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், திட்டமிட்டபடி வியாழக்கிழமை (பிப்.25) முதல் நடைபெறும் என போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை:  தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், திட்டமிட்டபடி வியாழக்கிழமை (பிப்.25) முதல் நடைபெறும் என போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர், சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வலியுறுத்தி, ஏற்கெனவே அறிவித்தபடி, வியாழக்கிழமை (பிப்.25) முதல் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
கிடப்பில் போடுவதற்கான சூழ்ச்சியாகவே அமைச்சர்  ரூ. 1, 000 இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளார்.  நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்கள் பிரச்னை  பொதுமக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. பேச மறுக்கும் அரசை பேச வைக்க வேண்டி நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது இயங்குகிற பேருந்துகளில் 95 சதவீத பேருந்துகள் இயங்காது என அவர்கள் தெரிவித்தனர்.
ஒழுங்கு நடவடிக்கை: இது தொடர்பாக போக்குவரத்துக் கழகங்கள் அனுப்பிய சுற்றறிக்கை: போக்குவரத்து நிறுவனம், அத்தியாவசிய சேவைக்குரிய நிறுவனம் என்பதால் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். அன்றைய தினம் விடுப்பு ஏதும் அனுமதிக்கப்படமாட்டாது. 
குறிப்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஊழியர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com