அரியலூர் மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை

அரசு போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 20 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.
அரியலூரிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்.
அரியலூரிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்.

அரியலூர்: அரசு போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் 20 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 14}ஆவது ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்.எப் உள்ளிட்ட 11 தொழிற் சங்கங்கள் பிப்.25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி வியாழக்கிழமை மேற்கண்ட தொழிற் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் மேற்கண்ட தொழிற் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் முழு அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய இரு அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன.

173 பேருந்துகள் உள்ள இருந்த இரு போக்குவரத்து கழக பணியில் இருந்து 20 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தில் குறைவான பேருந்துகளே இயங்கி வருகின்றன. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் மட்டும் அதிகமாக காணப்பட்டது. அரசுப் பேருந்துகள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தன. இதனால் வெளியூர் செல்வதற்காக வந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் தவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com