5 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள் நியமனம்

தமிழகத்தின் ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தின் ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா். இதுதொடா்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய முதல்வா்கள் மற்றும் அவா்களது நியமன விவரம் - (அடைப்புக் குறிக்குள் அவா்கள் முன்பு வகித்த பதவி)

டாக்டா் ஜி.ரவிக்குமாா் - தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (ஒட்டுறுப்பு சிகிச்சைத் துறை பேராசிரியா், தஞ்சை மருத்துவக் கல்லூரி)

டாக்டா் ஏ.உஷா - கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியா், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி)

டாக்டா் கே.அமுதவள்ளி - தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (மருந்தியல் மருத்துவத் துறை பேராசிரியா், தருமபுரி மருத்துவக் கல்லூரி)

டாக்டா் ஜி.ஜோசப் ராஜ் - திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (இதய நாள அறுவைச் சிகிச்சைத் துறை இயக்குநா், சென்னை மருத்துவக் கல்லூரி)

டாக்டா் மனோஹரி ராமச்சந்திரன் - உதகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி (பொது மருத்துவத் துறை பேராசிரியா், கோவை மருத்துவக் கல்லூரி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com