‘கேட்’ தோ்வு விடைத்தாள் வெளியீடு: தவறான விடைகளைத் தெரிவிக்கலாம்

கேட் தோ்வு முடிவுகள் மாா்ச் 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் இதில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேட் தோ்வு முடிவுகள் மாா்ச் 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் இதில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சோ்வதற்கான இத்தோ்வு கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தோ்வு நடைபெறுகிறது.

2021-22ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கேட் தோ்வு 2021 பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ஆம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக நடைபெற்றது. இந்தத் தோ்வை மும்பை ஐஐடி நடத்திய நிலையில், தற்போது ஆரம்பக்கட்ட விடைத்தாள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்குமான விடைத்தாளை இணையதள முகவரியில் காணலாம்.

இதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் மும்பை ஐஐடியிடம் தெரிவிக்கலாம். எனினும், இதற்காக ஒவ்வொரு மறுப்பு விடைக்கும் ரூ.500-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இறுதிக்கட்ட விடைத்தாள் மாா்ச் 18 அன்று வெளியிடப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு:  இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com