கூத்தாநல்லூர்: மாயக்கண் மாணவனுக்கு எஸ்.பி. பாராட்டு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த மாணவரை மாவட்ட எஸ்.பி.துரை விருது வழங்கி பாராட்டினார்.
மாணவருக்கு விருது வழங்கி பாராட்டிய  மாவட்ட எஸ்.பி.துரை.
மாணவருக்கு விருது வழங்கி பாராட்டிய மாவட்ட எஸ்.பி.துரை.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த மாணவரை மாவட்ட எஸ்.பி.துரை விருது வழங்கி பாராட்டினார்.

திருவள்ளுவர் பொதுநல அமைப்பு சார்பில், நடத்தப்பட்ட திருவள்ளுவர் தின விழாவில், பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் மெட்ரிக்., பள்ளியைச் சேர்ந்த, 7 ஆம் வகுப்பு மாணவர் ஆர்.சந்தோஷ் சரவணன், தனது இரண்டு கண்களையும் துணியால் கட்டிக் கொண்டு, தன் எதிரில் இருப்பவற்றைத் துல்லியமாகச் சொன்னார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை, 20 ரூபாயைக் கொடுத்தார். அந்த மாணவர் ரூ.20 என்றும், அதன் சீரியல் எண்ணையும் சொன்னார். மேலும், தொடர்ந்து, தனது அடையாள அட்டையைக் கொடுத்தார். அதையும் மிகச் சரியாகச் சொன்னார். 

மேலும், விழாவுக்கு வந்திருந்த பலரும் பரிசோதனைகள் செய்தனர். அனைத்தையும், மாணவர் மிகச் சரியாகச் சொன்னார். மாணவர் சந்தோஷ் சரவணனுக்கு, மாயக்கண் மாணவன் என்ற பட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை வழங்கி, பாராட்டினார். விழாவில், திருவள்ளுவர் பொது நல அமைப்பு தலைவர் என்.கே.ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com