கூத்தாநல்லூர் : குடியரசு தினத்தில் ரத்த தானம் வழங்க தமுமுக தீர்மானம்
கூத்தாநல்லூர் : குடியரசு தினத்தில் ரத்த தானம் வழங்க தமுமுக தீர்மானம்

கூத்தாநல்லூர் : குடியரசு தினத்தில் ரத்த தானம் வழங்க தமுமுக தீர்மானம்

குடியரசு தினத்தன்று ரத்த தானம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. கூத்தாநல்லூர் நகர தமுமுக, மமக பொதுக் குழுக் கூட்டம், மேலக் கடைத் தெரு, கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர தமுமுக, மமக சார்பில், குடியரசு தினத்தன்று ரத்த தானம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. கூத்தாநல்லூர் நகர தமுமுக, மமக பொதுக் குழுக் கூட்டம், மேலக் கடைத் தெரு, கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் எம்.முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ஏ. குத்புதீன், மாவட்டப் பொருளாளர் பர்வேஸ், மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.ஜெகபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநில விவசாய அணிச் செயலாளர் ஹெச்.எம்.டி.ரஹமத்துல்லாஹ் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தமுமுக, மமக நகரத் தலைவராக ஏ.கே.எம்.ஜெகபர் சாதிக்,நகரச் செயலாளர்கள் தமுமுக எம்.ஹெச். நிஜாமுதீன், மமக கே.எம்.நைனாஸ் அஹமது, தமுமுக, மமக பொருளாளர் எஸ்.ஏ.அப்துல் முஹம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, கடலூர் மண்டலப் பொதுக் குழுவில் திரளானோர் பங்கேற்பது. கூத்தாநல்லூர் நகரத்தில் தமுமுக மற்றும் மமக விற்கு அதிக உறுப்பினர்களைச் சேர்த்து கட்சிக்கு மேலும் வலு சேர்க்க வேண்டும். குடியரசு தின விழாவில், தேசியக் கொடி ஏற்றுவதுடன், 300 பேர் ரத்த தானம் வழங்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ளும் வகையில், அனைவரும் இணைந்து அதற்குரிய பணிகளை கவனிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com