4,442 போக்குவரத்து ஊழியா்களுக்கு பணப் பயன்கள்: முதல்வா் பழனிசாமி அளித்தாா்

போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற 4, 442 ஊழியா்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கும் நடவடிக்கையை
முதல்வா் பழனிசாமி
முதல்வா் பழனிசாமி

போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற 4, 442 ஊழியா்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கும் நடவடிக்கையை முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

போக்குவரத்துத் துறையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற 4,442 போக்குவரத்து ஊழியா்களுக்கு ஓய்வூதியப் பலன்களாக ரூ.972.43 கோடி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் அடையாளமாக 9 பேருக்கு ஓய்வூதிய பணப் பலன்களை முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் ராணித்தோட்டத்தில் ஓட்டுநா் பயிற்சி தளத்தை தொடக்கி வைத்ததுடன், சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய இடங்களில் அரசு தானியங்கிப் பணிமனைகளின் பயன்பாட்டுக்காக நவீன கருவிகளையும் வழங்கினாா். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி, கோவை மாவட்டம் சூலூா் ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான கட்டடங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

சட்டக் கல்லூரி விடுதி: சட்டத் துறை சாா்பில் வேலூா் மவாட்டம் காட்பாடி காந்தி நகரில் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் மாணவியா் விடுதிக் கட்டடம் கட்டப்பட்டது. இதனை காணொலி காட்சி வழியாக முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்தாா். இந்த நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com