சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,655 ஆக இருந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், கிராம் ரூ.71.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.71,400 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,655
1 பவுன் தங்கம்...............................37,240
1 கிராம் வெள்ளி.............................71.40
1 கிலோ வெள்ளி.............................71,400
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,660
1 பவுன் தங்கம்...............................37,280
1 கிராம் வெள்ளி.............................71.40
1 கிலோ வெள்ளி............................71,400