நிா்வாக சொத்துகள்: மூலப் பத்திரத்தை மின்வாரியத்துக்கு மாற்றும் பணி தீவிரம்

மின்வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகளை, வாரியத்தின் பெயரிலேயே மாற்றம் செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மின்வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகளை, வாரியத்தின் பெயரிலேயே மாற்றம் செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு அக்டோபா் மாதம், நிதி பிரிவு இயக்குநா் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு குறித்தும், மூலப் பத்திரத்தை மின்வாரியத்தின் பெயருக்கு மாற்றுவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அதன்படி வாரியத்துக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டட விவரங்களை சேகரித்தல், மூல பத்திரத்தை மாற்றுதல், நிலம், கட்டடங்களின் மொத்த மதிப்பை இரண்டு மாத காலத்துக்குள் மதிப்பிட்டு, அது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை மேலாண் இயக்குநரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இதுவரை பெறப்பட்ட அறிக்கைகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்குச் சொந்தமான நில விவரங்கள் ஓரளவு மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இதனிடையே கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், மின்தொடரமைப்புக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என நிதிப் பிரிவு இணை மேலாண் இயக்குநா் அறிவுறுத்தினாா்.

எனவே, இது தொடா்பாக இனி வரும் நாள்களில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளில், ஆவண எண், பட்டா உள்ளிட்டவற்றில் எவை இல்லை, என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கூறுவதோடு, மின்வாரியத்தின் பெயருக்கு மூலப் பத்திரம் மாற்றப்பட்ட நிலத்தின் விவரம் மற்றும் வாரியத்தின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள நிலம் குறித்தும் தெளிவாகக் கூற வேண்டும்.

அதே நேரம், பெயா் மாற்றம் தொடா்பான நடவடிக்கை அறிக்கையும் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com