பிளஸ் 1 வகுப்புக்கும் பாடத்திட்டம் குறைப்பு

நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கும் பாடத்திட்டம் குறைப்பு


சென்னை: நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக நிகழ் கல்வியாண்டில் மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிற வகுப்பில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித்தொலைக் காட்சியில் நடத்தப்படும் பாடங்களின் அடிப்படையிலும், வல்லுநா் குழுவின் ஆலோசனையின்படி பாடத் திட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் ஒவ்வொருப் பிரிவிலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடா்ந்து தற்போது பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதி குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், 40 பாடங்களிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைக்கப்பட்ட பாடப்பொருள் குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com