செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இலவச பேட்டரி கார்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் பயன்பாட்டிற்காக இலவச பேட்டரி கார் இயக்கத்தை புதன்கிழமை ரயில்வே துறையின் பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். 
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இலவச பேட்டரி காரை துவக்கி வைத்தார் ரயில்வே துறையின் பொது மேலாளர் ஜான் தாமஸ்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இலவச பேட்டரி காரை துவக்கி வைத்தார் ரயில்வே துறையின் பொது மேலாளர் ஜான் தாமஸ்

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் பயன்பாட்டிற்காக இலவச பேட்டரி கார் இயக்கத்தை புதன்கிழமை ரயில்வே துறையின் பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
 
ரெனால்டு நிஸான் டெக்னாலஜி பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஹேண்ட் இன் ஹேண்ட்  இந்தியா நிறுவனத்தின் சார்பில் புதன்கிழமை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வயது முதிர்ந்தோர் கர்ப்பிணி பெண்கள்  மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச பேட்டரி ஆப்பரேட்டர் காரை ரயில்வே துறையின் பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ரயில்வே துறையின் மண்டல  மேலாளர் மகேஷ் , ரெனால்டு நிஸான் மேலாளர்கள் கணபதி, நரசிம்மன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முதுநிலை பொது மேலாளர் லோகேஷ் குமார் கணபதி, பொது மேலாளர் பத்மா, முதன்மை மேலாளர் மோகனவேல், முதுநிலை திட்ட மேலாளர் லோகநாதன், செங்கல்பட்டு ரயில்வே நிலைய மேலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ரயில் பயணிகளிடம் இந்த இலவச பேட்டரி காரின் பயன்பாடுகள் குறித்தும், ரயில் நிலையத்திற்கு வரும் முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் இலவச பேட்டரி காரை பயன்படுத்திப் பயன்பெறுமாறு ரயில் பயணிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com