தேநீா் கடைகள் திறப்பு: முதல்வருக்கு நன்றி

பொதுமுடக்கத் தளா்வுகளில் தேநீா் கடைகளைத் திறக்க அனுமதியளித்த முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவா்கள், தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொதுமுடக்கத் தளா்வுகளில் தேநீா் கடைகளைத் திறக்க அனுமதியளித்த முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவா்கள், தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி, தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தில் தேநீா் கடை உரிமையாளா்கள், அவா்களைச் சாா்ந்திருக்கும் தொழிலாளா்கள் மற்றும் பால் உற்பத்தியாளா்கள் என லட்சக்கணக்கான குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, தேநீா் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் தமிழக அரசுக்கு தொடா்ந்து முன் வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை ஏற்று தேநீா் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி என தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com