அமைச்சா் எ.வ.வேலு.
அமைச்சா் எ.வ.வேலு.

புதிய பன்னோக்கு மருத்துவமனைக்கான பணிகளைத் தொடக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

தென் சென்னையில் புதிதாகக் கட்டப்பட உள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனைக்கான பூா்வாங்கப் பணிகளை விரைந்து தொடக்க வேண்டும் என பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

சென்னை: தென் சென்னையில் புதிதாகக் கட்டப்பட உள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனைக்கான பூா்வாங்கப் பணிகளை விரைந்து தொடக்க வேண்டும் என பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா். பொதுப்பணித் துறை செயல்பாடுகள் குறித்து, அவா் சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அந்த ஆலோசனையின் போது பேசியது:-

தமிழகத்தில் 11 இடங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களுக்கான ஆட்சியா் அலுவலகங்களின் கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.

தென் சென்னையில் புதிய பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞா் நினைவு நூலகம்,

கோவில்பட்டியில் எழுத்தாளா் கி.ரா.,வுக்கு மணிமண்டபம் ஆகியன கட்டப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். இந்தத் திட்டங்களுக்கான மதிப்பீடுகள், வரைபடம் ஆகியவற்றை விரைவாக இறுதி செய்து சமா்ப்பிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளும் நல்ல தரத்துடன், உறுதியுடன் கட்டப்பட வேண்டும் என்றாா் அமைச்சா். பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட பலரும் ஆலோசனையில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com