டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும்: மு.க. ஸ்டாலின்


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:

"உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அணுகுமுறையை மத்திய அரசிடம் கடைப்பிடிக்கவுள்ளோம். 

தமிழகத்துக்கு போதுமான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். அதை மறுக்கவில்லை. அதைப் போதுமான அளவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார். இதுதவிர அவ்வப்போது தொலைபேசி வாயிலாக பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் பேசுகிறோம். அவர்கள் அனுப்பியும் வைக்கின்றனர். அவர்களது கஷ்டங்களை அவர்கள் வெளிப்படுத்திகிறார்கள்.

இருப்பினும், செங்கல்பட்டு, நீலகிரி தடுப்பூசி தயாரிப்பு மையங்களில் உற்பத்தியைத் தொடங்கினால் இதை ஓரளவு சரிசெய்ய முடியும். அந்த முயற்சியைத் தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்றைய சந்திப்பிலும் அது வலியுறுத்தப்பட்டது.

தடுப்பூசி பற்றாக்குறையை வெளிப்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. கேட்கும் அளவுக்கு தடுப்பூசியை வழங்கினால், தடுப்பூசி விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.

கடந்தகால ஆட்சிகளில் டாஸ்மாக் கடைகள் எப்படி குறைக்கப்பட்டதோ அதேபோல் படிப்படியாகக் குறைக்கப்படும்.

தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்" என்றார் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com