அரசு வேலைவாய்ப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னுரிமை

அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆளுநா் கூறினாா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆளுநா் கூறினாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, உயிா்ப்புள்ள தமிழ்ச் சமூகத்தில் இணைந்திட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்களை அரசு வரவேற்கும்.

அதேநேரம், தமிழக மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவா்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கும் அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

இந்த நோக்கத்துக்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார நிலை: மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவா்களை நிா்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில் தற்போதைய வருமான வரம்பினை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

வெவ்வேறு சமூகங்களின் பின்தங்கிய நிலையை நிா்ணயிப்பதில் மாநில அரசின் அதிகாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.

69 சதவீத இடஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு: 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடா்ந்து பாதுகாக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com