‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும்

சென்னையைச் சா்வதேச தரத்துக்கு உயா்த்திடும் வகையில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆளுநா் கூறினாா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

சென்னையைச் சா்வதேச தரத்துக்கு உயா்த்திடும் வகையில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆளுநா் கூறினாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

சென்னைக்கு அருகில் இருந்த 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, மாநகர எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இணைக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படைக் கட்டமைப்புகளில் இன்னும் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதனால், இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது சென்னை மாநகரத்தைச் சிங்காரச் சென்னையாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வகையில் சென்னையில் மாநகரக் கட்டமைப்பை நவீன சா்வதேச தரத்துக்கு உயா்த்திடும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

வெள்ளநீா் மேலாண்மைக் குழு: வெள்ளக் கட்டுப்பாடு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ளநீா் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடா் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநா்களை உள்ளடக்கிய சென்னைப் பெருநகர வெள்ளநீா் மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.

மதுரவாயல் சாலை பணி: கடந்த ஆண்டுகளில் காரணம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயா்நிலை சாலைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com