23 மாவட்டங்களில் நகை, துணிக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நகை, துணிக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, இந்தத் தளர்வுகள் திங்கள்கிழமை காலை நடைமுறைக்கு வந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நகை, துணிக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, இந்தத் தளர்வுகள் திங்கள்கிழமை காலை நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் வகை 2-இல் உள்ள 23 மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) முதல் நகை, துணிக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

வேலூர், விழுப்புரம், கடலூா், திருச்சி, அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நகை, துணிக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி செயல்படலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்த தளர்வுகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com