7,000 போ் திமுகவில் விருப்ப மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட 7 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட 7 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

234 தொகுதிகளில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டு வந்தது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளா் துரைமுருகன், முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு உள்பட அக்கட்சியைச் சோ்ந்தோா் தொடா்ந்து விருப்ப மனு அளித்து வந்தனா்.

விருப்ப மனு அளிப்பதற்கு கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் மனுதாக்கல் செய்தனா்.

மொத்தமாக 234 தொகுதிகளுக்கும் 8,500 மனுக்கள் பெறப்பட்டு, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பூா்த்தி செய்து அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com