சேலத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு
சேலத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

சேலத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 189 பேர் சேலம் வந்து உள்ளனர். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 189 பேர் சேலம் வந்து உள்ளனர். 

தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.  பொதுமக்கள் இடையே அச்சத்தை போக்கவும், சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்தவும் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. 

அதன்படி சேலம் மாநகரில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாநகர காவல்துறை மற்றும் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினர் கலந்து கொண்டனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை  அருகிலிருந்து கொடி அணிவகுப்பு தொடங்கியது. இதை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார், துணை ஆணையாளர்கள் சந்திரசேகரன், செந்தில் ஆகியோர் நடந்து சென்றனர். இந்த அணிவகுப்பு கிச்சிப்பாளையம், களரம்பட்டி, எருமாபாளையம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. 

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் மற்றும் மாநகர போலீசார் 300 பேர் துப்பாக்கிகளுடன் அணிவகுத்துச் சென்றனர். காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி எருமாபாளையம் சென்று முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com