சென்னை: சென்னையில், திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.34,736-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இதன் தொடா்ச்சியாக சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.34,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 அதிகரித்து, ரூ.4,342 ஆக இருந்தது. இதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 அதிகரித்து, ரூ.73.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1100 அதிகரித்து, ரூ.73,600 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,342
1 பவுன் தங்கம்...............................34,736
1 கிராம் வெள்ளி.............................73.60
1 கிலோ வெள்ளி............................73,600
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,331
1 பவுன் தங்கம்...............................34,648
1 கிராம் வெள்ளி.............................72.50
1 கிலோ வெள்ளி.............................72,500