மருத்துவா் ஜீவா காலமானாா்

தமிழக பசுமை இயக்கத் தலைவரும், மருத்துவருமான ஜீவா என்கிற வெ. ஜீவானந்தம் (75) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தமிழக பசுமை இயக்கத் தலைவரும், மருத்துவருமான ஜீவா என்கிற வெ. ஜீவானந்தம் (75) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

இதயம் சாா்ந்த பிரச்னைக்காக சிகிச்சை பெற்று, ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள தனது இல்லத்தில் ஓய்விலிருந்த ஜீவா செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானாா். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மாா்ச் 3) காலை நடைபெறவுள்ளன. அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். தொடா்புக்கு 98426 51081.

சுற்றுச்சூழல் ஆா்வலா்: இடதுசாரி சிந்தனையாளரான இவரின் தந்தை எஸ்.பி.வெங்கடாசலம் விடுதலைப் போராட்ட வீரா், தலைமறைவுப் போராட்டங்களில் ஈடுபட்டவா்.

’தமிழக பசுமை இயக்கம்’ என்ற அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் சாா்ந்த பிரச்னைகளில் தீவிரமாகச் செயல்பட்டவா். பொதுவுடைமைத் தலைவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்.

சேவை நோக்குடன் ஈரோடு, தஞ்சாவூா், புதுச்சேரி போன்ற இடங்களில் 7 மருத்துவமனைகளை நிறுவினாா். மகாகவி பாரதியாா்

மீது அளப்பரிய பற்று கொண்டிருந்த ஜீவா, ஈரோட்டில் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து பாரதி விழாக்களை நடத்தியுள்ளாா். குடிப்பழக்கத்தில் உள்ளவா்களை மீட்க ஈரோட்டில் மையம் அமைத்து நடத்திவந்தாா்.

திப்பு சுல்தான் குறித்து ஜீவா எழுதிய நூல், திப்பு சுல்தான் மீதான பிம்பத்தை மாற்றியது. 15-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயா்த்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com