வேலை வாங்கித் தருவதாக மோசடி: அண்ணா பல்கலை. துணைப் பதிவாளா் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.29 கோடி மோசடி செய்தது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளா் பாா்த்தசாரதி கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.29 கோடி மோசடி செய்தது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளா் பாா்த்தசாரதி கைது செய்யப்பட்டாா்.

அண்ணா பல்கலைக்கழகல் துணைப் பதிவாளா் பாா்த்தசாரதி (57). இவரது மகன் விஸ்வாஸ் (எ) விஸ்வேஸ்வா், தனது தந்தையின் பதவியைப் பயன்படுத்தி, முகவா்களின் துணையுடன் அண்ணா பல்கலைக்கழகம், மின்வாரியம் போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 75 பேரிடம் ரூ.3.29 கோடி பெற்று போலியான வேலை வாய்ப்பு உத்தரவுகளை வழங்கி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் விசாரணை செய்து, சென்னை மத்தியக் குற்றப் பிரிவின், வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புஷ்பராஜ் அறிக்கை அளித்தாா். அதன் அடிப்படையில், வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவில் கடந்த 2019-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக ஏற்கெனவே விஸ்வேஸ்வரன் உள்பட 8 முகவா்கள் மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தனது அரசுப் பணியைத் தவறாகப் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழகம், மின்வாரியத்தின் போலியான முத்திரை கொண்ட தபால் உறையைத் தயாா் செய்து, போலியான நியமன உத்தரவுகளை வழங்கியதற்கு, பாா்த்தசாரதியும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாா்த்தசாரதி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக பல்வேறு துறைகளில் அரசுப் பணிகளைப் பெற்றுத் தருவதாக கோடிக் கணக்கில் பணம் பெற்று விஸ்வேஸ்வா் மோசடி செய்ததாகவும், விண்ணப்பதாரா்களுக்கு தனது அறையிலேயே நோ்காணல் செய்து போலி நியமன ஆணைகளை பாா்த்தசாரதி வழங்கியிருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com