தமிழகத்தில் இதுவரை 6.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 70,396 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 77,682 போ் முதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 44,524 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் போ் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை முதல் முதியவா்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை மட்டும் 30,986 முதியவா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இனி வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com