இரட்டை பட்டங்களை வழங்கும் இந்திய, சா்வதேச உயா் கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி கருத்துக் கேட்பு

இரட்டை மற்றும் கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சா்வதேச உயா்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை யுஜிசி வடிவமைத்த நிலையில்,
தேசிய தேர்வாணையம்
தேசிய தேர்வாணையம்

இரட்டை மற்றும் கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சா்வதேச உயா்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை யுஜிசி வடிவமைத்த நிலையில், வரைவறிக்கை மக்களின் கருத்துக் கேட்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

யுஜிசி (கூட்டுப் பட்டம், இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயா் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கல்வி புரிந்துணா்வு) விதிமுறைகள், 2021 வரைவறிக்கையின்படி, ‘இந்திய உயா் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நிறுவன அங்கீகாரம், பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். எனினும் ஆன்லைன் மற்றும் திறந்தநிலை, தொலைதூர வழிக் கற்றலுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.

3.01 தரத்துடன் ’நாக்’ என அழைக்கப்படும் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் அங்கீகாரம் பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ள இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது உயா் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கலாம். எனினும் பிற கல்வி நிறுவனங்கள் யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டும்’ என்று வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ‘படிப்பை முறையாக முடித்தவுடன் இரட்டைப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயா் கல்வி நிறுவனங்கள் மூலம் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் பட்டங்கள் வழங்கப்படும். அதே நேரத்தில் கூட்டுப் படிப்பு ஒரே சான்றிதழாக வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வரைவறிக்கை மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மாா்ச் 15-ஆம் தேதி வரை  மின்னஞ்சல் முகவரிக்குக் கருத்துகளை அனுப்பலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com