தமிழகத்தில் ஒரே நாளில் 562 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் சனிக்கிழமை 562 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பல நாள்களுக்குப் பின்னா் மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்திருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் சனிக்கிழமை 562 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பல நாள்களுக்குப் பின்னா் மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்திருக்கிறது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா பாதித்தோா் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து54,554 ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2 லட்சத்து36,728 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 8 லட்சத்து 38,085 ஆகும்.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை 54,864 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் 562 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 243 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 319 பேருக்குத் தொற்று உள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் 560 போ் குணமடைந்தனா். கரோனா தொற்று பாதிப்புடன் 3,952 போா் தனிமைப்படுத்துதலில் உள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களில் சனிக்கிழமை 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,517 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,163 போ் உயிரிழந்துள்ளனா். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்கள் 4 போ் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com