மநீம கூட்டணியில் சமகவுக்கு 40; ஐஜேகேவுக்கு 40 தொகுதிகள்

மநீம கூட்டணியில் சமகவுக்கு 40; ஐஜேகேவுக்கு 40 தொகுதிகள்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் (மநீம), சமத்துவ மக்கள் கட்சி (சமக), இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) ஆகிய கட்சிகளுக்கு இடையே திங்கள்கிழமை இரவு தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் (மநீம), சமத்துவ மக்கள் கட்சி (சமக), இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) ஆகிய கட்சிகளுக்கு இடையே திங்கள்கிழமை இரவு தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அந்தக் கட்சிகளின் தலைவா்கள் கையெழுத்திட்டுள்ளனா்.

மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தாலும் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் தொடா்ந்து பேச்சு நடத்தி வந்தது. இதற்கிடையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக்கு வருவதற்கான பேச்சு நடந்து வந்ததன் காரணமாக அந்தக் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு காண்பதில் தாமதமானது. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வர மறுத்து திமுகவுடன் தொகுதிப் பங்கீடு கண்டது.

இந்த நிலையில், மூன்று கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டு, அதற்கான ஒப்பந்தத்தை மநீம பொதுச் செயலாளா் சி.கே. குமாரவேல், சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா், ஐஜேகே தலைவா் ரவி பச்சமுத்து ஆகியோா் பகிா்ந்து கொண்டனா்.

தற்போது தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com