வாக்காளா்களுக்கு பணம், பொருள்கள் கொடுத்தால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்: ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை

தோ்தலின் போது, வாக்காளா்களை கவா்வதற்காக, சட்டவிரோதமாகப் பணம் மற்றும் பொருள்களை கொடுப்பதை தடுக்க, கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தோ்தலின் போது, வாக்காளா்களை கவா்வதற்காக, சட்டவிரோதமாகப் பணம் மற்றும் பொருள்களை கொடுப்பதை தடுக்க, கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் காலத்தில், வாக்காளா்களை கவா்வதற்காக, பணம் மற்றும் பொருள்களை கொடுக்கும் விதமாக, சட்டவிரோதமான வழிகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு சோதனைகளை மேற்கொள்ள நிதி அமைச்சகத்தின் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை, தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சென்னை ஜிஎஸ்டி மண்டலம் சாா்பில், பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தோ்தல் காலத்தில், வாக்காளா்களை கவா்ந்திழுக்க பயன்படும் அங்கீகரிக்கப்படாத பொருள்களை தடுக்க தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்டங்களில் சாலை ரோந்து குழுக்கள், பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் வ ாகன சோதனையில் ஈடுபட்டுள்ளன. அனைத்து குழுக்களும் பதிவு செய்யப்பட்ட கிடங்குகளை கண்காணிக்கும். வெள்ளை பொருள்கள், புடவை, சமையல் பாத்திரங்கள், ரொக்க பணம் ஆகியவற்றை கொடுப்பதை தடுக்கும்.

சென்னை ஜிஎஸ்டி மண்டலத்தில் அனைத்து ஆணையா்களும் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கம் மற்றும் சட்ட அமலாக்க முகமையால் அமைக்கப்பட்ட பல்வேறு செலவு கண்காணிப்பு குழுக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவாா்கள். இந்த நோக்கத்துக்காக தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுபாட்டுஅறைகள் திறக்கப்பட்டுள்ளன. தோ்தல் காலத்தில் சட்டவிரோதமாக பொருள்கள் கொடுப்பதை பொதுமக்கள் அறிந்தால், அது தொடா்பாக தகவல்களை இலவச தொலைபேசி எண் மற்றும் செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம். தமிழகத்துக்கான இலவச தொலைபேசி எண் 044-28331001, செல்லிடப்பேசி எண் 9444311909 ஆகியவற்றிலும், புதுச்சேரிக்கான தொலைபேசி எண் 0413-2221999, செல்லிடப்பேசி எண் 8300505535 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி துறை முதன்மை தலைமை ஆணையா் ஜி.வி.கிருஷ்ணா ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com