எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாதெமி விருது

2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் இமையம்

2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இமையம் எழுதிய 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. இந்த விருதினைப் பெறுபவருக்கு தாமிர பட்டயமும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

அந்தவகையில் 2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவரின் முதல் நாவலான 'கோவேறு கழுதைகள்' ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 50-க்கும் அதிகமான நூல்களைத் தமிழில் அவர்  எழுதியுள்ளார். இவருடைய செடல் நாவல் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

1964-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் கடலூர் மாவட்டம் கழுதூரில் பிறந்த இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை. இலக்கியத்துறையில் இமையம் என்றழைக்கப்படும் இவர், முதுகலைப் பட்டம் பெற்ற ஆசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com