தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல: ப.சிதம்பரம் தாக்கு

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது. இது உண்மையா என்றால் உண்மையல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
pchi075131
pchi075131


சென்னை: தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது. இது உண்மையா என்றால் உண்மையல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுப தொடர்பாக அவர் சுட்டுரை பதிவில், தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அஇஅதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது. இது உண்மையா என்றால் உண்மையல்ல

மின் மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள். அந்த  நிலையில் தமிழ்நாடு் இல்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது, 50 % வெளி்மாநிலங்களில் வாங்குகிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்?   என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com