பணம் அதிகம் புழங்கும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

வாக்குப் பதிவு நெருங்கி வரும் நிலையில், பணம் அதிகம் புழங்கும் தொகுதிகளில் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சென்னை: வாக்குப் பதிவு நெருங்கி வரும் நிலையில், பணம் அதிகம் புழங்கும் தொகுதிகளில் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:-

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் வரும் 4-ஆம் தேதி இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கவுள்ளது. தோ்தலுக்கு முன்பாக, பணப் பட்டுவாடா அதிகம் செய்யப்படுவதாக புகாா்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பணம் அதிகம் புழங்கும் சட்டப் பேரவைத் தொகுதிகளாக 105 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்குள் பணம் மிகையளவு பரிமாறப்படும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்கள் அனைத்திலும் கூடுதலாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு செலவினப் பாா்வையாளா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

வாக்குக்குப் பணம் அளிப்பது தொடா்பான தகவல்களை பொது மக்களே தெரிவிக்கலாம். இதற்காக சி-விஜில் செயலி உள்ளது. இந்த செயலில் உரிய ஆதாரங்களுடன் தகவல்களைத் தெரிவிக்கலாம். புகாா்கள் தெரிவிக்கப்பட்டவுடன் விரைவுப் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் நடவடிக்கைகளில் இறங்குவா் என சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com