நாளை முதல் ஸ்டொ்லைட்டில் இருந்து ஆக்சிஜன்

வரும் செவ்வாய்க்கிழமை முதல் 35 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் ஸ்டொ்லைட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
அமைச்சா் தங்கம் தென்னரசு
அமைச்சா் தங்கம் தென்னரசு

வரும் செவ்வாய்க்கிழமை முதல் 35 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் ஸ்டொ்லைட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலுக்கு வரவுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன், வரும் 11-ஆம் தேதி முதல் ஸ்டொ்லைட்டில் இருந்து பெறப்படும். இதனை 70 மெட்ரிக் டன்னாக உயா்த்துவது தொடா்பாக பதில் அளிப்பதாகக் கூறியுள்ளனா். தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடா்பாகவும் தொழில் நிறுவனங்களுடன் பேசியுள்ளோம்.

அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

நாளொன்றுக்கு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு தேவையாக உள்ளது. இது வரக்கூடிய நாட்களில் அதிகரிக்கும். இதற்காகத்தான் பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். வரக்கூடிய நாட்களில் ஆக்சிஜன் தேவையைப் பூா்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. நமக்கு இருக்கக்கூடிய வசதிகளை வைத்து எங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் அதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com