விவசாயிக்கு இலவசமாக 5 ஆயிரம் கிலோ இயற்கை உரம்: காஞ்சிபுரம் நகராட்சி

செவிலிமேடு உரக் கிடங்கில் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் 5 ஆயிரம் கிலோவை நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு இலவசமாக வழங்கினார்.
மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை இலவசமாக விவசாயி கார்த்திகேயனிடம் வழங்குகிறார் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி.
மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை இலவசமாக விவசாயி கார்த்திகேயனிடம் வழங்குகிறார் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி.

காஞ்சிபுரம் நகர் செவிலிமேடு உரக் கிடங்கில் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் 5 ஆயிரம் கிலோவை நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் செவிலிமேடு பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரிக்கும் குப்பைக் கிடங்கு உள்ளது. செவிலிமேடு பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு எடுத்து வரப்பட்டு அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையிலிருந்து உரமாகத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 

மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்ட உரம் 5 ஆயிரம் கிலோ செவிலிமேடு விவசாயி கார்த்திகேயனுக்கு நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார், செவிலிமேடு பகுதி நகராட்சி பணியாளர் ரோஸ்மேரி ஆகியோரும் உடன் இருந்தனர். இயற்கை உரத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட விவசாயி கார்த்திகேயன் நகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு டிராக்டரில் ஏற்றிச் சென்றார்.

நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி இது குறித்து கூறுகையில், 

நகர்ப்பகுதிகளில் தினசரி சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கி வருகிறோம். தேவைப்படும் விவசாயிகள் நகராட்சியை தொடர்பு கொண்டு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.ரசாயன உரம் கலக்காமல் இயற்கை உரம் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் மண் வளத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com