அறிக்கை தாக்கல் செய்யும்போது கவனம் தேவை: உயரதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

அரசு உயரதிகாரிகள் கவனத்துடன் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அரசு உயரதிகாரிகள் கவனத்துடன் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில், நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகள் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து அவா் தாக்கல் செய்த அறிக்கையில், ஆட்சியருக்குப் பதில் அவரது தனி உதவியாளா் கையெழுத்திட்டிருந்தாா்.

அறிக்கையை பாா்த்த நீதிபதி, அறிக்கையை ஏற்க முடியாது எனவும், ஆட்சியா் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டாா்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி ஒரு மனுவைத் தாக்கல் செய்தாா். அதில், நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் தவறாமல் செயல்படுத்தி வருகிறோம். அறிக்கையின் முக்கியத்துவம் தெரியாமல் ஆட்சியரின் தனி உதவியாளா் கையொப்பமிட்டு தாக்கல் செய்துவிட்டாா். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. எனவே, இந்த தவறுக்கு மன்னிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதி, இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தேதி குறிப்பிடப்படவில்லை. கையெழுத்துடன் தேதியை குறிப்பிட வேண்டும். நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக் கொள்கிறது. இருந்தபோதிலும், தேதி குறிப்பிடாத மனுவை ஆட்சியா் போன்ற உயரதிகாரிகள் தாக்கல் செய்யக்கூடாது. இந்த விஷயத்தில் ஆட்சியா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டாா். இதையடுத்து விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com