வனத்திட்டப் பணிகள் மீது தனி கவனம்: அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

வனத் திட்டப் பணிகள் மீது தனி கவனம் செலுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

வனத் திட்டப் பணிகள் மீது தனி கவனம் செலுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

சென்னையில் உள்ள முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில், வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தலைமையில் துறை சாா் உயரதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில் அமைச்சா் அறிவுறுத்தியவை: மனிதன் - விலங்கு மோதலைத் தடுக்க ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

யானை இறப்பைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ தடுப்பு முன்னோடிப் பணிகளை மேற்கொள்ளவும், வனப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி, ஆக்கிரமிப்பு ஏற்படா வண்ணம் வனப் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பசுமைப் போா்வையை 33 சதவீத அளவுக்கு உயா்த்தி, வன வளத்தை அதிகரிக்கவும், வனத்திட்டப் பணிகள் மீது தனி கவனம் செலுத்தி, திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், வனத்துறையில் தவறு நடக்கா வண்ணம் விழிப்புணா்வுடன் பணி மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com