காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையாளர் பொன்.ஜெயராமன்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையாளர் பொன்.ஜெயராமன்

கரோனா நோயாளிகளுக்கு தினசரி 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்: இணை ஆணையர்

காஞ்சிபுரம்  அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் தினசரி 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படும் .

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் தினசரி 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறநிலையத்துறை இணை ஆணையாளர் பொன்.ஜெயராமன் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கிடுமாறு அறநிலையத்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் நாளாக புதன்கிழமை முதற்கட்டமாக 500 உணவுப் பொட்டலங்கள் கதம்ப சாம்பார் சாதமாக தயாரித்து வழங்கப்பட்டன. 

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் உணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து அறநிலையத்துறை பணியாளர்கள் மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு உணவுப் பொட்டலங்கள் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.கல்பனாவிடம் வழங்கப்பட்டது. அறநிலையத்துறை இணை ஆணையாளர் பொன்.ஜெயராமன் அவற்றை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர்கள் ஆ.குமரன்,ந.தியாகராஜன் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன் கூறியது..

முதற்கட்டமாக புதன்கிழமை மட்டும் கதம்ப சாம்பார் சாதம் 500 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.வியாழக்கிழமை முதல் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் என தலா 2500 உணவுப் பொட்டலங்கள் வீதம் தினசரி 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.அரசின் மறு உத்தரவு வரும் வரை தினசரி 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அறநிலையத்துறை சார்பில் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com