காங்கயம் அருகே தனியார் நூற்பாலையில் 14 பேருக்கு கரோனா: கம்பெனிக்கு சீல்

காங்கயம் அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த நிறுவனத்துக்கு காங்கயம் வட்டாட்சியர் புதன்கிழமை சீல் வைத்தார்.
காங்கயம்-திருப்பூர் சாலை, பெருமாள்மலை பகுதியில் இயங்கி வந்த நூற்பாலைக்குச் சீல் வைக்கும் காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கனகராஜ். 

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை அருகே பெருமாள்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நூற்பாலையில் பணிபுரியும் வடமாநிலங்களைச் சேர்ந்த 4 பேருக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்தும் நூற்பாலை இயங்கி வந்த நிலையில், இங்கு பணிபுரியும் 14 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நூற்பாலை வளாகத்திற்குள் இருந்த ஹாஸ்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமையன்றும் இந்த நூற்பாலை செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கரோனா தொற்று தொடர்பான அரசின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, இந்த நூற்பாலைக்கு காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் புதன்கிழமை காலை 11 மணியளவில், இந்த ஆலையைப் பூட்டி, சீல் வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com