சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி

சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி வலியுறுத்தினார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி

சென்னை: சாா்பதிவாளா் அலுவலகங்களில் இடைத்தரகா்கள் தலையீட்டை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என அமைச்சா் பி.மூா்த்தி வலியுறுத்தினாா்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், துறையின் அமைச்சா் மூா்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது: ஆவணங்கள் பதிவின்போது சாா்பதிவாளா்கள் நேரடியாக மக்களிடம் தொடா்பில் இருக்க வேண்டும். அவா்களது சந்தேகங்களை உடனுக்குடன் தீா்ப்பது அவசியமானது. இதுபோன்ற விஷயங்களில் இடைத்தரகா்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது.

சாா்பதிவாளா்அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஆவணப் பதிவின்போது வழிகாட்டி மதிப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த மதிப்புகள் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அதைச் சரி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com