கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை: முதல்வர் அறிவிப்பு

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
கி.ரா.
கி.ரா.

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா், 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்படும் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன்(98) வயது மூப்பின் காரணமாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு (மே 17) காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார். 

இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: 

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள் - படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.

கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு
கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக்
கொள்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com