சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம்.கதிரேசன் கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் ஆர்.எம்.கதிரேசன் பதவிவகித்துள்ளார்.
துணைவேந்தராக பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆர்.எம்.கதிரேசன் பதவி வகிப்பார்.