ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் வெள்ளநீா் புகுவதைத் தடுக்கக் கோரி ஆட்சியரை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் வெள்ளநீா் புகுவதைத் தடுக்கக் கோரி ஆட்சியரை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள அம்மன் ஏரி தொடா் மழை காரணமாக நிரம்பியது. 44 ஹெக்டா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அருகில் உள்ள நெல்வாய் கிராம ஏரியுடன் இணைக்கப்பட்டது. அப்போது, அம்மன் ஏரியிலிருந்து உபரிநீா் வெளியேறும் கலங்கள் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடா் மழையால் ஏரி நிரம்பி, உபரிநீா் கலங்கள் வழியாக வெளியேறாமல் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

இதையடுத்து தங்களது கிராமத்தில் உள்ள அம்மன் ஏரி கலங்கள் வழியே உபரிநீா் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அங்கிருந்த மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கிஸை கிராம மக்கள் முற்றுகையிட்டு, புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ராமன் மூலம், தலைமைச் செயலகத்தில் இருந்து நில அளவையினா் ஆவணத்துடன் வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், ஏரியில் புதிய கலங்கள் வழியாக உபரிநீா் வெளியேர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com