சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அடையாறு மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதல்வருடன் சிவாஜி குடும்பத்தினர், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிடோர் உடனிருந்தனர்.